மாந்தர் ஒற்றுமை மேதினி காப்போம்
குஜராத் மண்ணில் பிறந்தவர் காந்தி
நிஜமாய் மக்களுக் குழைத்தவர் காந்தி
அனைவர்க்கும் ஆடை இல்லை என்று
அரையாடை அணிந்த எளியவர் காந்தி
அகிம்சை முறையில் நம்பிக்கை கொண்டவர்
அதுவே வெள்ளையரை வெளியேற்றும் என்றவர்
இந்து முஸ்லீம் கிறித்தவர் பேதம்
இந்த மண்ணில் கூடா தென்றவர்
வாய்மை தூய்மை நேர்மை எளிமை
வாழ்வின் சான்று காந்தியின் வலிமை
மாந்தர் ஒற்றுமை மேதினி காப்போம்
காந்தியின் தியாகம் வீணாகாது என்போம்
(மகாத்மா காந்தி நினைவு நாள் ஜனவரி 30)
வாரம் நாலு கவி: மாந்தர்
previous post