முத்தம் தரும் நெருக்கம் இனிது
சத்தம் இன்றி முத்தம் அமுது
காதலன் காதலிக்குத் தந்திடும் முத்தம்
காதலில் தெரிவிக்கும் அன்பின் மொத்தம்
கர்ப்பிணி வடிவில் வயிற்றில் முத்தம்
கணவன் தந்திடும் நன்றியின் சத்தம்
பிறந்த குழந்தை பெற்றிடும் முத்தம்
பிறப்புக் காரணி தாயின் முத்து
தளர்நடை பயிலும் குழந்தைக்கு முத்தம்
இளநடை அழகுக்கு பெற்றோர் முத்தம்
…பெரணமல்லூர் சேகரன்
வாரம் நாலு கவி: முத்தம்
previous post