வாழைக்கு வரவேற்பு
குலையுடன் கலையாக
தூணாய்ப் புறமிரண்டும் நிறுத்தப்பட்டுத் தொடங்க
அக்கினி சாட்சியாய்
கரங்களிரண்டும் கோர்த்து
மணப் பந்தத்தில்
நீளும் உறவு
மெய்க்குள் மெய்யாய்
உதர ஊஞ்சலில்
ஆடாமல் அசையாமல்
ஈரைந்து திங்கள்
பொறுமையாய்க் காத்திருந்த
உள்ளிருப்புப் போராட்டத்தில்
தாய்மையின் அழகை
அழகாக்கும் கவிதையாய்
மகப்பேறு மட்டுமே
சான்றாய் நின்று
கொப்பாய் விரிந்து
இனம் பெருகும்!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: வாழைக்கு
previous post