விரலுளி அகத்தில்
உயிர்த்துளி வற்றிட
எய்த பணி
எஞ்சி விக்கித்திட
வாஞ்சையாய் வேற்றுளி
இருதுளி நவிழ
உயிரை உயிர்ப்பித்து
ஓடுகிறது பேனா
பேரன்பின் அடையாளம்
காய்ந்த சிறுகோளமாய்
பள்ளி மேசைகளில்
நினைவுச் சுவடாகிறது!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: விரலுளி
previous post