பார், எழுது போட்டிக் கதை: வாழும் காதல்!

by Nirmal
8 views

அந்த இரவு கோவையைப் பொறுத்தவரை மிகவும் விசித்திரமான
இரவு. வானம் முழுவதும் கருமேகங்கள். அவ்வப்போது மின்னல்
வெட்ட, மழை ஜன்னல் கண்ணாடிகளைத் தட்டித்
தழுவிக்கொண்டிக்க… நகரத்தின் பரபரப்பு அடங்கி, நள்ளிரவின்
அமைதி மெல்லப் படர்ந்துகொண்டிருந்தது…
அந்த நேரத்தில், தனது அறையில் தனியாக அமர்ந்திருந்தான்
கமலக்கண்ணன்.
அவன் முன்னால் ஒரு செல்பேசி. அதன் திரையில் ஒரே ஓர்
அறிவிப்பு மட்டும் மின்னிக்கொண்டிருந்தது.
“Wi-Fi Connected – Last seen 11:59 PM.”
கமலின் முகத்தில் குழப்பம்.
ஏனென்றால் அந்த வைஃபை இணைப்பு அவனுடைய காதலி
இனியாவின் வீட்டில் இருந்தது.
இனியா இறந்து சரியாக முப்பது நாட்கள் ஆகிவிட்டன!
கமலும் இனியாவும் கல்லூரியில் சந்தித்துக் காதலித்தவர்கள்.
இனியா ஒரு மென்பொருள் பொறியாளர். கமல் ஒரு குற்றப்
புலனாய்வு இதழில் நிருபர்.
இருவருக்கும் இடையிலான காதல் ஓர் அற்புதமானது. தினமும்
காலையில் ஒரு குறுஞ்செய்தி, இரவில் ஒரு நீண்ட தொலைபேசி
உரையாடல், இடையிடையே காதல் கவிதைகள் என்று அவர்களின்
வாழ்க்கை அழகாகப் பயணித்தது.
இனியாவிற்கு ஒரு விசித்திரமான பழக்கம் இருந்தது.
அவள் கமலிடம் எப்போதும் சொல்வாள்:
“கமல்… ஒருநாள் நான் உங்கிட்ட பேச முடியாமப் போனாலும்,
நான் சொல்ல நெனைச்சதை நீ கண்டுபிடிக்கணும்.”
“இதென்ன சினிமா வசனம்?” என்று சிரிப்பான் கமல்.
“இல்லைடா… வாழ்க்கையில சில உண்மைகள் நேரடியாச்
சொல்ல முடியாது. அதைப் பார்க்கத் தெரிந்திருக்கணும். எழுத்துல
தேடத் தெரிந்திருக்கணும்!”

பார்! எழுது! | 2

அவள் சொன்ன அந்த வார்த்தைகளின் பொருள் அவனுக்குப்
பின்னர்தான் புரிய வந்தது.
ஒரு மாதத்திற்கு முன்பு…
இனியா தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தாள்.
காவல்துறை விசாரணையில் அது தற்கொலை என்று முடிவு
செய்யப்பட்டது.
ஆனால் கமலால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஏனென்றால் இறப்பதற்கு முந்தைய நாள் இரவு இனியா
அவனிடம் பேசியிருந்தாள்.
“கமல்… எனக்கு ஏதோ ஆபத்து இருப்பதாகத் தெரியுது.”
“என்னாச்சு இனியா?”
“நான் வேலை செய்யுற கம்பெனில சிலர் மிகப்பெரிய குற்றத்தை
மறைக்கப் பார்க்குறாங்க. அதுக்கான ஆதாரம் எங்கிட்ட இருக்கு.”
“யாராச்சும் உன்னை மிரட்டுறாங்களா?”
சில நொடிகள் மௌனம்.
“நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன்டா. ஒருவேளை நாளைக்கு
நான் …”
“இனியா! உளறாதே! என்ன நடந்தாலும் நான் இருக்குறேன்.
நம்பு!”
அதற்குப் பிறகு அழைப்பு துண்டிக்கப்பட்டது.
மறுநாள் காலையில் அவள் இறந்துவிட்ட செய்தி வந்தது.
மீண்டும் நிகழ்காலம்.
கமலின் கைப்பேசியில் திடீரென்று ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அனுப்பியவர்: இனியா.
அவனது இதயம் ஒரு நொடி நின்றுவிட்டது.
செய்தியில் இருந்தது ஒரே ஒரு வரிதான்.
“பார்! எழுது!”
அதற்குக் கீழே ஒரு நிழற்படம்.

பார்! எழுது! | 3

அந்தப் படத்தில் இனியாவின் வீட்டில் இருந்த பழைய புத்தக
அலமாரி தெரிந்தது.
கமல் உடனடியாக எழுந்தான். ஏதோ உணர்ந்தவனாக.
இனியாவின் வீட்டிற்கு நேரே சென்றான். வீடு பூட்டப்பட்டிருந்தது.
அவளுடைய பெற்றோர் வெளியூரில் வசிப்பதால் வீடு காலியாகக்
கிடந்தது.
தன்னிடம் இருந்த மாற்றுச் சாவி மூலம் கதவைத் திறந்தான்.
அறைக்குள் அவன் மெல்ல ஒருவித அச்சத்துடன் நுழைய… அவனுக்கு
ஏதோ வித்தியாசமாகத் தோன்றியது. இனியாவின் வாசனை
இன்னும் அந்த அறையில் கமழ்ந்தது. அவள் பயன்படுத்திய மேசை,
புத்தகங்கள், கண்ணாடி, அவள் விரும்பிய நீல நிறப் பூச்சாடி என
அனைத்தும் அப்படியே உறைந்து இருந்தன.
காலம் கடத்தாமல் புத்தக அலமாரியைத் திறந்தான்.
அதில் ஒரு சிறிய டைரி இருந்தது.
முதல் பக்கத்தில் இனியாவின் அழகிய கையெழுத்து:
“என்னைத் தேடாதே… நான் விட்டுச் செல்லும் எழுத்துகளைத்
தேடு!”
அடுத்த பக்கத்தில் சில எண்கள்.
11 – 23 – 05 – 19
அதற்குக் கீழே ஒரு சிறிய குறிப்பு:
“இந்த எழுத்துகளுக்குள் உயிர் இருக்கிறது.”
கமல் அந்த எண்களை ஆங்கில எழுத்துகளாக நினைத்துப்
பார்த்தான்.
11 = K
23 = W
05 = E
19 = S
அவை உடனடியாகப் பொருள் ஏதும் தரவில்லை.
இதனால் அடுத்த பக்கத்தில் இருந்த குறிப்பைத் தொடர்ந்து
கவனித்தான்.

பார்! எழுது! | 4

“341!”
S E W K.
அவன் மீண்டும் மீண்டும் யோசித்தான். பல சமயங்களில் அவர்கள்
பலவிதமான சங்கேத குறியீட்டு மொழியில் பேசிக் கொள்வதுண்டு.
இதுவும் ஒரு கடவுச்சொல்லின் குறியீடே!
அப்போது அவனுடைய செல்பேசியில் மீண்டும் அறிவிப்பு
வந்தது.
“New Device Connected to INIYA_HOME.”
அவன் சற்று நடுங்கினான். உடல் வியர்த்தது. ஆனாலும் துணிவை
அவன் விடவில்லை.
யாரோ அந்த வீட்டின் தனிப்பட்ட வைஃபையைப்
பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள்!
கமல் துரிதமாகத் தனது மடிக்கணினியைத் திறந்தான். இனியா
பயன்படுத்தி வந்த தனிப்பட்ட கிளவுட் கணக்கிற்குள் நுழைய
முயன்றான்.
கடவுச்சொல் கேட்டது.
அப்போது அவனுக்கு இனியா இதுபற்றி சொன்ன ஒரு காதல் வரி
மின்னல் போல் நினைவுக்கு வந்தது.
“நீயும் நானும் இணைந்தால் மட்டுமே முழுமை!”
அடுத்த நொடியே அவன் இருவருடைய பிறந்த தேதிகளையும்
இணைத்துக் கடவுச்சொல்லாகப் பதிவு செய்தான்.
திரை திறந்தது.
அதில் ஒரு காணொலி இருந்தது.
அந்த வீடியோவை இயக்கினான்.
அதில் இனியா பதற்றத்துடன் பேசினாள்.
“கமல்… இந்த வீடியோவை நீ பார்க்குறீன்னா, நான் உசுருடன்
இல்லைனு அர்த்தம். என்னோட கம்பெனியில வேலை பார்க்குற முகேஷ்,
எல்லோருடைய தனிப்பட்ட தகவல்களைத் திருடி விற்பனை செய்து
வர்றான். அதுக்கான ஆதாரங்கள் என்கிட்ட இருக்கு.
அவனுடைய கூட்டாளி வேறு யாருமில்ல…”

பார்! எழுது! | 5

வீடியோ திடீரென்று நின்றுவிட கமல் தவித்தான். மேலும் இயக்க
முனைந்தான்.
அந்த நேரத்தில் திரையில் ஒரு புதிய செய்தி தோன்றியது.
“நீ உண்மையைத் தேடுற. அதுக்குப் பலனா இப்போ உன் உசுரை
இழக்கப் போற!”
கமல் அதிர்ச்சியில் உறைந்தான்.
அதே சமயத்தில் வீட்டின் பின்புறக் கதவு பையத் திறக்கும் சத்தம்
கேட்டது.
யாரோ உள்ளே வந்துகொண்டிருப்பதை உணர்ந்தான் கமல். உடல்
வியர்த்தது.
கமல் உடனே விளக்கை அணைத்துவிட்டு திரைக்குப் பின்னால்
மறைந்தான்.
காலடிச் சத்தம் அவனை நெருங்கியது.
“கமல்… வெளியே வா!”
அந்தக் குரலைக் கேட்டதும் அவனுக்கு அதிர்ச்சி.
அது முகேஷின் குரல்!
அவன் கையில் துப்பாக்கி ஒன்று குறிபார்த்துக் கொண்டிருந்தது.
“இனியா எங்கே ஆதாரத்தை வச்சிருக்குறான்னு எனக்குத் தெரியும்.
அதை எடுத்துட்டு வந்துடு. இல்லைன்னா உன்னுடைய கதையும்
அவளோட கதையைப் போலத்தான் முடியும்!”
கமல் மூச்சை அடக்கிக்கொண்டிருந்தான்.
அப்போது அவனுடைய செல்பேசி ஒளிர்ந்தது.
இனியாவிடமிருந்து மற்றொரு செய்தி!
“கதவைப் பார்! எழுது!”
அவன் மெதுவாகக் கதவைக் கூர்ந்து பார்த்தான்.
கதவின் உள்புறத்தில் ஒரு சிறிய கருப்பு நிறப் பொருள்
ஒட்டப்பட்டிருந்தது.
அது ஒரு ரகசிய ஒலிப்பதிவுக் கருவி!

பார்! எழுது! | 6

இனியா இறப்பதற்கு முன்பு அந்த வீட்டில் நடந்த
உரையாடல்களைப் பதிவு செய்திருந்தாள்.
அந்தக் கருவியை எடுத்துப் பார்த்தான். அதில் கடைசியாகப்
பதிவு செய்யப்பட்டிருந்த குரல் அவனைக் கலங்கடித்தது.
அது முகேஷின் குரல் அல்ல.
மற்றொரு ஆளின் குரல்!
“முகேஷ், அவளை உசுரோடு விட்டுவைக்கக் கூடாது. அவள்ட்ட
இருக்குற ஃபைல்ஸ் வெளியே வந்தா நம்மோட வாழ்க்கையே
முடிஞ்சிடும்!”
அந்தக் குரல் கமலுக்கு மிகவும் பரிச்சயமானது.
அவன் நம்பியிருந்த நண்பன்!
காவல்துறை அதிகாரி விஜய்!
கமல் அதிர்ச்சியில் உறைந்தான்.
அந்த நேரத்தில் முகேஷ் அவன் மறைந்திருந்த இடத்தைக்
கண்டுபிடித்துவிட்டான்.
“மாட்டிக்கிட்டாயா?”
துப்பாக்கியை அவன் நெஞ்சிற்கு நேரே உயர்த்தினான்.
கமல் தப்பிக்க முயன்றான். இருவருக்கும் இடையே கடுமையான
போராட்டம் வெடித்தது.
திடீரென்று வீட்டின் மின்சாரம் துண்டிக்கப்பட…
அந்த இருட்டில் டொப்பென்று துப்பாக்கி சுடும் சத்தம்!
சில விநாடிகள் கழித்து வெளிச்சம் வந்தபோது முகேஷ் தரையில்
விழுந்து கிடந்தான். மூச்சுப்பேச்சின்றி.
அவனுடைய கையில் இருந்த துப்பாக்கி சற்று தொலைவில்
கிடந்தது.
கமல் கதவை நோக்கி ஓடினான்.
வாசலில் நின்றிருந்தது விஜய்!
“என்ன கமல்… உன் காதலி விட்டுட்டுப் போன கதையைப்
படிச்சிட்டீயா?”

பார்! எழுது! | 7

அவன் சிரித்தான். எள்ளலாக.
“இனியாவைக் கொன்னது நீயா?”
“ஆமாம்! அவள் எங்களோட ரகசியத்தைத் தெரிஞ்சுகிட்டா.
அவளை மெரட்டினோம். கேட்கல. அதனால அவளோட சாவைத்
தற்கொலையாக மாத்துனோம்.”
“அப்படின்னா இப்போ என்னையும் கொல்லப் போறீயா?”
“வேற வழி?”
விஜய் துப்பாக்கியை உயர்த்தியபோது, முகேஷ் திடீரென்று
சிரித்தான்.
“நீ ஒரு விஷயத்த மறந்துட்ட விஜய்!”
“என்ன?”
“நான் பத்திரிகையாளன் மட்டுமில்ல… இனியாவின் காதலனும்
கூட!”
அவன் தனது செல்பேசியைக் காட்டினான்.
அதில் நேரடி ஒளிபரப்பு ஓடிக்கொண்டிருந்தது.
விஜய்யின் ஒப்புதல் வாக்குமூலம் முழுவதும் இணையத்தில்
ஒளிபரப்பாகிக்கொண்டிருக்க…
வெளியே காவல்துறை வாகனங்களின் சைரன் சத்தம் கேட்டது.
விஜய்யின் முகம் வெளிறியது.
அடுத்த நொடி காவல்துறையினர் அவனைச் சுற்றிவளைக்கத்
தொடங்கினர்.
விசாரணையில் இனியா தற்கொலை செய்துகொள்ளவில்லை
என்பது நிரூபிக்கப்பட்டது. முகேஷூம் விஜய்யும் கைது
செய்யப்பட்டனர். இனியா சேகரித்திருந்து வைத்திருந்த அனைத்து
ஆதாரங்களும் மீட்கப்பட்டன.
ஆனால் கமலின் மனதில் ஒரே ஒரு கேள்வி மட்டும்
எஞ்சியிருந்தது.
இறந்துபோன இனியாவின் செல்போனிலிருந்து அவனுக்கு
அந்தச் செய்திகள் எப்படி வந்தன?
அவன் மீண்டும் இனியாவின் வீட்டிற்குச் சென்றான்.

பார்! எழுது! | 8
அவளுடைய மடிக்கணினியைத் திறந்தான்.
அதில் ஒரு கோப்பு இருந்தது.
“MY LAST LOVE – FOR KAMAL.”
அதனைத் திறந்தான்.
இனியாவின் குரல் ஒலித்தது.
“கமல்… நீ இதைக் கேக்குறப்ப நான் உன்னோட இருக்க
மாட்டேன். என்னோட மரணத்துக்குப் பின்னும் உன்னோட
பேசுவதுக்காக இந்தச் சேதியை முன்னமே ஏற்பாடு செய்துட்டேன்.
என் லேப்டாப்பில் சேமிச்சிருந்த ஆதாரங்களைப் பயன்படுத்தி,
குறிப்பிட்ட நேரங்கள்ல உனக்குச் சேதி வரும் வகையில
அமைச்சிருக்குறேன். நீ என்னை நம்புவேன்னு எனக்குத் தெரியும்.
நம்மோட காதல் முடிந்துவிடல கமல். என் உசுர் மட்டுந்தான்
முடிஞ்சிருக்கு. என்னோட உண்மை இன்னும் உசுரோடு இருக்கு.
நீ எப்போதும் என்கிட்ட சொல்வாயே…
‘உன்னோட கண்களைப் பார்த்தாலே என்னோட மனசுல ஆயிரம்
கவிதைகள் பிறக்குது’ னு…
இப்போ என்னோட கண்கள் இல்லாம போனாலும், நான்
உனக்காக விட்டுச்சென்றதைப் பார்!
ஐ லவ் யூ ஸோ மச், கமல்!”
அவனுடைய கண்களில் கண்ணீர் வழிந்தது.
மேலும், அந்தக் கணினித் திரையில் கடைசியாக ஒரு வரி
தோன்றியது.
“Last Wi-Fi Connection Disconnected.”
கமல் மெதுவாகக் கணினியை மூடினான்.
வெளியே மழை பெய்துகொண்டிருந்தது.
அவன் இனியாவின் நிழற்படத்தைத் தொட்டுப் பார்த்தான்.
அந்த இரவு உலகம் ஒரு காதலியின் மரணத்தைப் பற்றி
பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்க…
மரணத்திற்குப் பிறகும் தன்னை வழிநடத்திய காதலை எண்ணிப்
பெருமிதம் கொண்ட கமல், அணுகுண்டாய் வெடித்தான்.

பார்! எழுது! | 9

‘ஐய்யோ! இனியா…..!’

இப்போட்டியில் கலந்துக்கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!