இரக்கமற்ற இனத்தால்
இறப்பற்று அல்லலுறுவாயென
சபிக்கப்பட்டு படைக்கப்பட்ட
பாவ ஜீவனம்
வெந்து விடைபெறவிளைந்தும்
விஷக்கதிராகும் அவலப்பிறவி
விதையேந்தும் கருப்பையடைத்து
பழியேந்தும் அப்பாவியம்பு
தடை இருந்தும்
விடையறியாது
உலாவருமிது
மற்குடலை வழியின்றி
தின்று தீர்த்தபின்னேனும்
பைக்குள் திணித்து
பதுக்கியவற்றை ஒழிக்குமோ
மண்ணாகிப்போனது என்னானால் என்னவென்றென்னும் பகுத்தறிவுள்ளம்!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: இரக்கமற்ற
previous post