மஞ்சப்பையில் பயணித்த மளிகை
பொருட்கள்
வாழையிலையில். கட்டிய பலகாரமும்
பூவும்
டம்பிளரில் காபி சொம்பில் தண்ணீர்
பானையில் அரிசியும் ஜாடியில் புளியும்
இவையெல்லாம் அழகுடன் ஆரோக்கியமுமாய் அக்காலம்
இன்று நெகிழியில் உலா வரும்
மளிகை பொருட்களும் ..மலரும் …உணவும்
அழகுமில்லை ஆரோக்கியமும் இல்லை அழிவுமட்டுமே…
மித்ரா சுதீன்.