அரூபி வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
அரூபி தளத்தில் 2025ஆம் ஆண்டின் ஜூன் மாதத்திற்கான போட்டி தொடங்கிவிட்டது.
போட்டியின் தலைப்பு: மாய புத்தகம்

போட்டி விதிமுறைகள்:
ஒருவர் பல கதைகள் எழுதிடலாம்.
வார்த்தைகள்: 500க்குள் இருந்திட வேண்டும்.
கதைக்களம்: எழுத்தாளர்களின் விருப்பத்தேர்வாகும். விஞ்ஞானம், மெய்ஞானம், திகில், சமூகம், காதல், வரலாறு என்று உங்களுக்கு பிடித்தமான எவ்வகையை (genres) வேண்டுமென்றாலும் முன்னிறுத்தி உங்கள் கதையை நீங்கள் எழுதிடலாம்.
போட்டி வரையறை: 02.06.2025 – 09.06.2025
படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
2022arubi@gmail.com
கட்டாயம் மின்னஞ்சலில் இணைக்க வேண்டிய குறிப்புகள்:
எழுத்தாளர் பெயர்
கதையின் தலைப்பு
அலைபேசி எண்
ஜிபே எண் (G pay Number and Person Name)
கதையை Ms Word அல்லது ஈமெயிலில் நேரடியாக எழுதி அனுப்பிட வேண்டும்.
ஒருமுறைக்கு, இருமுறை எழுத்து பிழைகளை சரிப்பார்த்த பின்னர் கதைகளை அனுப்பிடவும்.
எழுத்து பிழைகளை தவிர்த்து, வாக்கியத்தின் முடிவில் ஒற்றை புள்ளி வைத்து (single dot), தேவையான இடத்தில் கோமா (coma), மேற்கோள் குறிகள் (quotation) போட்டு, பத்தி (paragraph) முறையில் எழுதி அனுப்பிடவும்.
போட்டி சம்பந்தமான விடயங்கள் அனைத்தும் கீழ்கண்ட புலன குழுவில் பகிரப்படும். ஆகவே, போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புவோர் கீழிருக்கும் புலன குழுவில் இணைந்துக் கொள்ளவும்.
போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும் வரை போட்டிக்கான கதைகளை வேறெங்கும் பதிவேற்ற கூடாது.
ஏற்கனவே, வேறு தளங்களில் நீங்கள் அல்லது மற்றவர் எழுதி, வெற்றி பெற்ற அல்லது வெளிவந்த படைப்புகளை, அதாவது (அச்சாக, மின்னூலாக, அரூபி தளத்தையும் சேர்த்து) இப்போட்டிக்கு அனுப்புவதை கட்டாயம் தவிர்க்கவும்.
போட்டியின் வெற்றியாளர்கள் 2025 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாத இறுதியில் அறிவிக்கப்படுவர்.
வித்தியாசமான முறையில் கவர்ந்திழுக்கும் படி எழுதப்பட்டு, அதிக மதிப்பெண்கள் பெரும் தரமான மற்றும் சிறந்த படைப்புகளே வெற்றி பட்டியலில் இடம் பெரும்.
வெற்றி பெறும் தகுதியான மூவருக்கு வெற்றியாளருக்கான மின்சான்றிதழ் வழங்கப்படும்.
பங்கேற்கும் அனைவருக்கும் மூன்று மாதத்திற்குள் பங்கேற்பாளர் மின்னியல் நற்சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும்.
போட்டிக்கான கதைகள் அனைத்தும் மூன்று நாட்களுக்குள் அரூபி தளத்தில் பதிவிடப்படும்.
அவைகளின் திரிகள் அரூபி தளத்தின் அதிகாரபூர்வ குழுக்களில் பகிரப்படும். இணையாதவர்கள் இணைந்துக் கொள்ளவும்.
Aroobi Official What’s Application Channel
Aroobi Official Tamil Website Facebook Page
Aroobi Official Facebook Group
வாசகர்கள் அனைவரும் தொடர்ந்து உங்கள் ஆதரவை அரூபி தளத்திற்கு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடு அரூபி தளம் புதிய முயற்சியில் களம் இறங்கியுள்ளது.
ஆகவே, போட்டிகளில் உற்சாகமாய் கலந்துக் கொண்டு தொடர்ந்து அரூபியோடு பயணிப்பீர்களாக.
போட்டியை பற்றிய சந்தேகங்கள் இருப்பின் தனிப்பட்ட முறையில் வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி அனுப்பி தெளிவுப்படுத்தி கொள்ளவும்.
நன்றி. வணக்கம்.