இயற்கையின் மடியில் தனிமைச் சுகம்

by Nirmal
7 views

வானம் தொடும் மலையின் உச்சியிலே
வண்ண மேகங்கள் தீண்டும் பரவெளியிலே,

அலை மோதும் கடலின் ஓசையினிலே
அமைதியைத் தேடும் தனிமைச் சுகம் இதுவே!

பாறைகள் அரவணைக்கும் பாங்கு அதனில்
பச்சைப் பசேலென மறைந்திருக்கும் சோலை,

இயற்கை தந்திடும் நிக ஈில்லா அழகுடன்
இதயம் குளிரும் இனிய தருணம் இதுவே!

மாலை மங்கும் அந்த வானத்தின் சாயலில்
மகிழ்ந்து நிற்கும் அந்த மாளிகையின் மடியில்,

காற்றின் மெலிதான சங்கீத நாதத்தில்
கலந்து போகிறது இந்த உலகத்தின் இரைச்சலே!

உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!