கவிஞர் – லி.நௌஷாத் கான்
கிடைப்பது எதுவாயினும்
ஏற்றுக்கொள்ளும்
பக்குவமிருந்தால்
பாழும் நரகம் கூட
சொர்க்கம் தான்
கல் துளைத்து
வளர்ந்து நிற்கும்
செடியை விட
உன் வாழ்கையொன்றும்
அவ்வளவு கடினமானது அல்ல
போராடு
மண் உன்னை முத்தமிட போகும்
கடைசி நாள் வரை போராடு
இந்த கடின வாழ்வும்
கரும்பாய் தித்திக்கும்!
உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
