கவிஞர்: முத்துக்குமார்
குண்டு பல்பு புராதனம்
அக்காலத்தில்…
மங்கல் மஞ்சளில்
நிழலாய் தெரியும் உருவம்..
மெல்லிய டங்ஸ்டன் இழையில்
வெளிச்சம் பரவும் அதிசயம்
விஞ்ஞான வளர்ச்சியில்
குழல் பல்பும் எல்இடி இன்னும் வர
குண்டு பல்பில் அதிசயம்
வண்ண மலர்களால் நிரப்பப்பட்ட
கிண்ணம் போன்ற பல்பு
மின்சாரம் பாய்ச்சினால் அதில்
வண்ணம் பல மின்னுமோ
வானவில் கைவசப்படுமோ
கங்கைநீரை கிண்டியில் அடைத்தாற்போல்
மலர் தோட்டத்தை
சிறு குடுவையில் நிரப்பி
கண்கள் மலர கவரும் காட்சி….
உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
