நவரச போட்டிக் கதை: அழுகை 

by admin 2
113 views

செல்வியின்  அம்மா  இறந்து போன     துக்கம்  தாங்க இயலாமல்  உற்றார் , உறவினர்  எல்லோரும்  வருத்தத்துடன்  அழுத வண்ணம்  பிரேதத்தை  சுற்றி  இருந்தனர் . ,

தீடீரென    இறப்பு  ஆனதால்  ஊரில் பலருக்கு  நிகழ்வு தெரியாது 

செல்வி  அந்த ஊரில் சற்று  பிரபல்ய மானவர்.

சில தினங்கள்  களித்து    வைதீக  காரியங்கள்   நடந்து  கொண்டிருந்த வேளை.

செல்வியுடன் பணி புரிந்து தற்போது ஒய்வு பெற்ற தோழி  மங்கைக்கு   அன்று தான்  இந்த  செய்தி  தெரிந்து செல்வியின்   மொபைல் போனில் செல்வியை அழைத்து  பேச பல முறை முயற்சி செய்தாள்.

செல்வி  அழைப்பவர்  யாரென பார்த்து   எடுத்தால்   லேசில்  விட மாட்டாள் .  இங்குள்ள காரியங்கள்  தடை படும் என  கருதி  மொபைல ஹரியிடம் கொடுத்து  எடுக்க வேண்டாம் என கூறி  விட்டாள்.

மங்கைக்கோ  அன்று தான்  வியாழ கிழமை ,  இன்றே  எப்படியாவது  செல்வியிடம் பேசி விட வேண்டும் என கருதி 

அடுத்து  செல்வியின்  கணவர் ஹரிக்கும்  விடாது அழைத்தாள்,

ஹரி பொறுக்க  முடியாமல்  செல்வியின் மொபைலை  எடுத்து  : மேடம் இப்போ நீங்க செல்வியிடம் பேச முடியாது , சடங்குகள் நடக்கிறது , 

மாலை  முடிந்தால் பேசுங்க ”  என்று கூறியதும்  அதற்கு  மங்கை 

” ஹரி , நான்  காலையில் இருந்து   உன் வீட்டுக்காரிக்கு போன் அடித்து கொண்டே  இருக்கிறேன் ,, அவள் ஏன் என்னை  ஒதுக்குகிறாள் : என்று  சற்று ஆவேசமாக கூறியதும்  ஹரி  சற்று கோபப்பட்டு ” மேடம் , சற்று நிலைமையை புரிந்து கொள்ளுங்கள் , இப்போ போன் பேசும் நிலையில்   செல்வி இல்லை,,,,,,  நீங்க மாலை முடிந்தால் பேசுங்க :” என்று கூறி  போன் இணைப்பை  துண்டித்து  விட்டார் .

அன்றைய  சடங்குகள் ஒரு வழியாக  முடிந்து  மாலை  செல்விக்கு  மீண்டும் மங்கையிடம் இருந்து  போன்  வந்ததும்  பேசி முடித்ததும்

செல்வி மீண்டும்  மறைந்த அம்மாவை நினைத்து அழுக  ஆரம்பித்து விட்டாள் . 

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள:

https://aroobi.com/14625-2/

You may also like

Leave a Comment

error: Content is protected !!