மனிதா
உடல் முழுவதும் உனக்கு
கொடுக்கில் இருக்கு எனக்கு
கனப்பொழுது கடுக்கும் விசமெனக்கு
காலமெல்லாம் வலிக்கும் விசமுனக்கு
மனிதா
தேகத்தில் விசம் எனக்கு
பாதுகாப்புக்காய் அது இருக்கு
மனதில் எண்ணத்தில் இருக்குது
வார்த்தையில் தெறிக்குது உனக்கு
மனிதா
நான் உமிழும் விசம்
சிலநேரம் மருந்தாகும் உனக்கு
உனக்குள் இருக்கும் விசம்
உன்னுயிரையும் அது பறிக்கும்!
சர். கணேஷ்