ஒரு படம் ஒரு கவி: இயற்கையின் மடியில் உயிர் துடிப்பு

by Nirmal
7 views

செங்கற் சுவரினில் செறித்த பாசியும்,
மஞ்சள் பூக்களின் மனதை ஈர்க்கும் வாசியும்,

இதயத்தில் உதித்த மெல்லிய உணர்வுகளை,
இதமாய் நம் முன்னே கொண்டு சேர்க்குதே!

பழைய சுவரின் இடுக்குகளில் பூத்த மலர்களே,

பார்வையாளரின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தவளே,

வாழ்வின் கடினமான பாதையிலும் இன்பம் உண்டு என்பதை,

வண்ணமாய் உந்தன் மலர்ச்சியால் உணர்த்துவாயோ?

உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!