கவிஞர்: முத்துக்குமார்
வெளிச்சம் என்பது விழிப்பு
வெளிச்சம் நம்பிக்கை தரும்
இருளின் மாயைகள்
இல்லாமல் ஆக்கும்
தடுப்புகள் இன்றி
வெளிச்சம் வந்தால்
அதனதன் சுயம்
அதுவாகவே காட்டும்
வண்ணங்களின் ஊடே
பயணித்தால் பல
எண்ணங்கள் தோன்றி
பேதங்கள் காட்டும்
சிதறிய வண்ணங்கள்
சிதறிய எண்ணங்கள்
எண்ணம் சிதறாமல்
வண்ணம் ரசித்து
விந்தைகள் காண்போம்
உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
