கவிஞர்: சினேகிதா ஜே ஜெயபிரபா
சாறாகிய பழக்கலவை
வேறாக ஆகிடாமல்
சுவையை ஏற்றியே
சுகிக்க தந்திடுமே
யாராக இருந்தாலும்
தோதாக புசிக்கத்தந்து
யாதான வேளையிலும்
பசிப்போக்கும் ரொட்டியுமே
சாதாரண சாமானியன்
சாப்பிடும் ரொட்டியும்
செல்வந்தன் வீட்டினிலே
பழப்பாகோடு விருந்தாகுமே
சாதா ரொட்டியும்
சத்தாய் மாறுமே
சேர்ந்து சுவைக்கையில்
சோர்வும் நீக்குமே
வயிற்றுப் பசியில் வறுமையில் வாடுவோனும்
வெறும் ரொட்டியால்
வயிற்றை நிரப்பிட
மீந்த ரொட்டியை
ஈந்தே அளித்தால்
நொந்த மனதிலும்
நிந்தையும் அகலுமே
தனித்தனியே உணவாகி
சேர்ந்ததனால் விருந்தாகி
பகிர்தலினால் மகிழ்வாகி
பரவசமும் தந்திடுமே
ரொட்டி அறியுமோ
ஏழையின் உணவென
பழப்பாகுக்குப் புரியுமோ
பணக்காரனின் பந்தாவென
இதயம் அளிக்கவே காத்திருக்கும் ரொட்டியாகியே
நிரம்பி வழிவோம் அன்பின் பழக்கூழென
உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
