கவிஞர்: Senthil vanan Prasika
கற்கள் நிறைந்த இடத்திலும் மலரத் தெரிந்த பூவுக்கு, வசந்தம் ஒரு நிபந்தனையல்ல!
வாழ்க்கையும் அப்படித்தான்…
வசதிகள் கிடைத்தால்தான் வாழ வேண்டும் என்பதில்லை;
வலிகள் வந்தாலும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்!
உன்னைச் சுற்றி இருப்பவர்கள் உன் வளர்ச்சியைத் தடுத்தாலும்,
உனக்குள் இருக்கும் நம்பிக்கையை யாராலும் அழிக்க முடியாது!
விழுவது தோல்வியல்ல, எழ மறப்பதுதான் தோல்வி;
தனிமை பலவீனமல்ல, உன்னை நீ அறியும் தருணம்!
எல்லோருக்கும் பூந்தோட்டத்தில் மலர வாய்ப்பு கிடைப்பதில்லை;
சிலரின் வாழ்க்கை கற்களுக்கிடையேதான் அழகாகிறது!
நினைவில் கொள்…
சூழ்நிலை உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கலாம்;
ஆனால் உன் மனவலிமைதான் உன் வரலாற்றை எழுதும்!
🌼 மலர்வதற்கு இடம் தேடாதே… நீ இருக்கும் இடத்தையே மலர்ச்சோலையாக்கு!
உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
