ஒரு படம் ஒரு கவி: நீ செய்வதெல்லாம்

by Nirmal
5 views

நீ செய்வதெல்லாம்
அழகாய் இருக்கிறது
அழகாய் இருப்பதையெல்லாம்
நீ செய்கிறாயா?
நீ செய்வதால்
அவையெல்லாம்
அழகாய் இருக்கிறதா !
ஒன்றுமே புரிவதற்குள்
உன் அபிநயங்கள்
ஒன்றொன்றுக்குள்ளும்
நான் புதைந்து போகிறேன்
பெண்ணே
நீ பெண்ணாய் பிறந்ததால் தான் என்னவோ
நான் ஆணாய் பிறந்ததற்கு
பிறவிப்பலன் அடைந்ததாய்
உணர்கிறேன்
உன் ஆட்டத்திற்கு
அகிலமே அடங்கும்
இந்த மானிடன் மட்டும்
எம்மாத்திரம்?!

உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!