கவிஞர்: அருள்மொழி மணவாளன்
மலரும் மலர்
சுவராய் இருந்த என் மனதில்
மலராய் பூத்த என்னவளே
கல்லாய் இருந்த உன்னவனை
முள்ளால் கீறி கொல்லாமல்
புல் மேல் இருக்கும் பனித்துளி போல்
சொல்லால் சாமரம் வீசினாயே
துள்ளி குதித்த என் மனமோ பிறர்
எள்ளி நகைத்திடுவார் என பயங்கொண்டு
சுவராய் என்னை ஆக்கிக்கொண்டேன் மீண்டும்
மலர்வாய் என்ற நம்பிக்கையில்
உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
