கவிஞர்: சினேகிதா, ஜே ஜெயபிரபா
முளைக்கும் முனைப்பு இருந்துவிடில்
முட்டியும் மோதியும் முளைத்திடலாம்,
விழுந்த இடம் எதுவாகினும்
வேர் ஊன்றி தளிர்த்திடலாம்.
கல்லின் கடினம் கடந்தும்
புல்லில் பூவும் பூத்திடுதே,
பாறையிலும் பூ மலரும்
வீரியமது விதையிலே இருந்துவிடில்.
சிறைக்குள் சிக்கிய சின்னவிதை
அறைக்குள் இருந்து வெளிவந்து
சிரித்திடும் சிறு மலரென
உரைத்திடுதே கல்லுக்கும் கருணையுண்டெனவே!
கடினம் கண்டு கலங்கிடாதே,
முடியும் என்று முயன்றுவிடு –
சுவரை உடைத்த பூவைப்போல்
நீயும் நாளை பூத்திடுவாய்!
உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
