படம் பார்த்து கவி: நத்தை

by admin 3
137 views

நத்தை போல் நங்கை
அத்தை பெற்ற தத்தை
அச்சம் வந்த போது
நத்தை ஓடு நானு

மெத்தை மீது தத்தை
நத்தை போல் நாணும்
தன்னை போலே எடை
பத்து மடங்கு தாங்கும்

நத்தைக்கு ஓடு தான் வீடு
வீடோடு தான் வாழ்வு
அதைப் போலே அவளும்
என் வீடு காக்கும் நத்தை

சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!