ஒரு படம் ஒரு கவி: அன்பின் அகலென

by Nirmal
1 views

ஒளி வெள்ளம் இருளகற்ற
ஒளிர்ந்து ஒளிருதே நதியலையும்

அல்லும் பகலென மிளிர
அகலிலும் பகலவன் வெளிச்சமோ

விண்ணில் பூத்த பட்டாசுகளும் மண்ணில் ஒளிர்ந்ததோ வண்ணமலர்களாய்

நரகாசுர வதத்தின் முடிவோ
வனவாச முடிவின் மகிழ்வோ

மாவலி அரசர் வரவோ
அறுவடை அதனின் நிறைவோ

அலங்காரக் கோலங்கள் அழகென
ஆடம்பர வேடங்கள் பலப்பல

இன்னும் இருக்கத்தான் இருக்கிறது
இக்கால நரகனின் அரக்கத்தனம்

வேடம்தான் வேறு வேறாய்
ஆடம்பரம் அகங்காரம் அலங்காரமென

வேரறுக்க இயலா நிலையிலே
இயல்பு எல்லாம் வேரறுக்கப்பட்டு

வெல்லவே ஏற்றுவோம் தீபங்கள்
நல்லவை நலமென ஒளிரவே

அன்பின் திரி ஏற்றுவோம் அவனியில் மனிதம் மாண்புற

இயல்பாய் இருந்திட இயன்றிடில்
இறைமையின் நிறைமை ஒளிருமே

அவரவர் அரக்கத்தனம் அழித்திட்டு
அன்பின் அகலென மின்னுவோம்

உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!