வாரம் நாலு கவி: சாளரம்

by admin 3
103 views

சாளரம் அருகே காலைக் குளம்பி
இளஞ்சுடு நீரில் மிதமான குளியல்
ஆவி பறக்கும் இட்லியும் சட்னியும்
கால்நீட்டி படுத்தபடி தொலைக்காட்சி நிகழ்ச்சி
அடிநாக்கை இனிப்பாக்கும் அமிர்தமாய்த் தேநீர்
நொறுவல் தீனியாய் முறுக்கும் வடையும்
மதிய பட்டியலில் விருப்ப உணவுகளே!
அம்மா! அடியே! சத்தங்கள் இல்லை
என் வீடு என் கட்டில்
கொண்டாட்டம் தான் தாய் வீட்டில்!!

                   

பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!