கவிஞர்: முத்துக்குமார்
மின்னல் வெட்டில்
மோதிய மேகங்கள்
மாரிக்கால மழை
வாரித்தரும் கொடை
குளிர்ந்த நிலத்தில்
நீர் வரையும் கோலங்கள்
மண்ணின் மணத்தில்
மலரும் தளிர்கள்
செந்தணல் அடுப்பில்
சோளம் பொரிந்து
உப்பும் காரமும்
உவப்பாய் சேர்த்து
ஆகிவந்த கையால்
எலுமிச்சைச் சுவையில்
நாவுக்கு சுவையாய்
குளிருக்கு இதமாய்
தண்மையை வெல்ல
தணலின் அணைப்பில்
தின்று களியுங்கள்
காலத்தின் பயணத்தில்
கனிந்து நிற்கும்
மனிதன் நான்
வாருங்கள் –இந்த
சுவையுண்டு பாருங்கள்..
உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
