ஒரு படம் ஒரு கவி: கண்ணை மூடிக் கொண்டு

by Nirmal
5 views

கண்ணை மூடிக் கொண்டு
உலகம்
இருண்டு விட்டதாய் எண்ணாதே
விழித்துப்பார்
ஒருவேளை
இருள் சூழும்
உன் உலகம் கூட
ஒரு துளி ஒளி 💡 பட்டு
பிரகாசிக்கலாம்
எண்ணம் மட்டுமே
செயலாகும்
வண்ணமயமாக்கப்பட்ட வாழ்வு
வேண்டுமென்றால்
விழித்து கொள்-ஏனெனில்
உன் வாழ்வை
உன்னால் மட்டுமே மாற்ற முடியும்
உன்னிலிருந்து
ஒரு தீ 🔥 பற்ற வை
நாளைய உன் வாழ்வு
அடுத்தவர்களுக்கு வாழ்வளிக்கும்
தீப ஒளியாக 💡 கூட மாறலாம்!

உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!