ஒரு படம் ஒரு கவி: சூழலால் சுணங்கிவிடாதே

by Nirmal
2 views

வறியவர் வாழ்விலே
அரியன செய்திட
தெரியலை என்றே
வருந்தி அழுகிறதோ
வானமும் மேகமும்

இருண்ட வானிலும்
மின்னிடும் ஒளிக்கீற்றாய்
வறண்ட வாழ்வினை
வசந்தம் ஆக்கிட
மருண்டு போகாதே

நனைந்தாலும் அணையாதென
நம்பிக்கை நிலைத்திட
பற்றியெரியும் பற்றுறுதியுடனே
சுட்ட சோளமதால்
சுடர்விடும் நெருப்பென

சிறுவொளி அதனால்
இருளதை அகற்றிடும்
மனமது கொண்டு
சூழல் எதுவானாலும்
சுணங்காதிருப்பதே சுகவாழ்வாகிடுமே

உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!