கவிஞர்: இ.டி. ஹேம மாலினி
முகில் மூடும் மாலையில் ஒளிக்கோலங்கள்,
முகிலாய் மிதக்குது மின்மினி விளக்குகள்.
நதியின் கரைகளில் நிறைகிறது வெளிச்சம்,
நேயத்தின் இதழ்களில் மலர்கிறது மகிழ்ச்சி.
வானத்து விண்மீன்கள் தரையிறங்கி வந்ததோ,
வண்ணப் பூக்களோடு தீபங்களும் சங்கமித்ததோ.
இருளை விரட்டும் இந்த இனிய திருநாளில்,
இன்பம் பொங்கட்டும் உங்கள் இல்லங்களிலே!
அரூபி தளத்துக்கும் குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
குழுவில் உள்ள அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
