கவிஞர்: புனிதா பார்த்திபன்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை
வேருக்கு நெக்குவிடுமென்ற
வித்தகக் கிழவியின்
தத்துவம் சொல்லும்
நல்வழியின் உள்வழியாய்
எண்ணம்தனில் உண்மையும்
ஏறிச்செல்லும் வன்மையும்
ஏனிப்படி என்பதை
ஏணிப்படியாக்கும்
திண்மையுமிருந்தால்
பாறையும் பாதை தரும்
இன்னும் மேலாய்
அறத்தின் அடிப்படையில்
அலர்ந்திடும் யாவிற்கும்
பாறை என்ன
பாரே வளைந்து வழி கொடுக்கும்!
உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
